கதை சொல்லி

Sunday, December 18, 2011

இன்றொரு நாள் போதுமா?

இத்தனை வருஷமா இணையத்துல உலவுனதுதிலேயே இன்னைக்குத்தான் உருப்படியா எதோ செஞ்சோமுன்னு ஒரு மனநிறைவு, இத்தனை நாளா சிலிகான் தளத்தில பார்த்துகிட்டு இருந்த நண்பர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித்தந்த ஈரோடு தமிழ் வலைபதிவர் குழுமத்திற்க்கும், ஈரோடு கதிர் அண்ணனுக்கும் நன்றி.
யுவகிருஷ்ணா, அதிஷா, அருமை அண்ணன் ஜாக்கி போன்றோருடன் அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பும்,
அன்பு அண்ணன் முத்தக் கவிஞர் செல்வா அண்ணனுடன் அளவலாவும் பேறும் பெற்றமைக்கு மகிழ்கிறேன். இவற்றிற்க்கு நான் என்ன செய்து விட முடியும்
நன்றி என்ற சிறு வார்த்தையை உதிர்ப்பதை தவிர......

Friday, September 30, 2011

புணர்ச்சி விதிகள் 2

 நீண்ட இரவுகள், முடியாத கனவுகள், தொலைந்து போன வாலிபம்
அவளுக்கும் அப்படித்தானோ; மணவறையில் நான்.

உதட்டை பிதுக்கிய மகளுக்கு சொன்னால் அம்மா!
நிழல்களின் சாயலில் நிஜங்களின் பிம்பம்,
சில நேரங்களில் அப்படித்தான்.

அண்ணனுக்கு பெண் பார்க்கும் படலம்,
படியாத பேரம், அப்பாவுக்கு நன்றி,
எனக்கு மட்டும் பிடித்தது முக வாயில் அவள் மச்சம்.

காலையில் நண்பன் திருமணம்
தவித்த விரகம் தனிமையில்.

                                         - கதை சொல்லி

Tuesday, September 27, 2011

புணர்ச்சி விதிகள் 1

ஓர் இரவில் உன் உந்திசுழி சுழலில் மூழ்கி போனேன்
ஆற்று வெள்ளமென நீ...

என் காதல் இப்படித்தான் அவளின் மௌனமும், எனது பதிலும்
ரயில்பாதை என நானும் அவளும்...

இரை தேடிய பறவையென நான், கொத்தித் தின்ன தானியம்,
செரிச்ச பின்னும் இனிக்குது...
                                                    - கதைசொல்லி..


Friday, March 4, 2011

கதை சொல்லிகள்

ஊரெங்கும் கதை சொல்லிகள்
கடன் கொடுத்து அறிந்து கொண்டேன்.



இறையாண்மை

எதாவது சரியாய் பேசினால் கெட்டுவிடுமாம் இது,
அதற்காக நரகலை நரகல் என்று சொல்லாமல்,
நல்மணம்மிக்க மலர் என்றா சொல்வது...

                                                                       கதைசொல்லி....

Wednesday, March 2, 2011

கோபம் விரோதியா? நண்பனா?

        ரௌத்திரம் பழகு என்றான் முண்டாசு கவிஞன் பாரதி, ஆனால் இன்று ரௌத்திரம் கொண்டவன் எல்லோரும் காயடிக்கப் படுகின்றான், 
கோபம் செல்லாவிடத்தில் தீது.
எனது தோழன் கொண்ட சமூக கோபத்தின் விளைவு 45 நாள் சிறை வாசம், அவன் கோபம் சரி ஆயினும் செயல் முறை தவறு.
சமுக கோபம் கொள்ள காரணம் நூறு உண்டு. அதை நிறைவேற்ற சரியான தருணம் தேவை, செயல் திட்டம் தேவை


” வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.” 

                                                  எனும்  வள்ளுவன் வாக்கின் படி கோபம் கொண்டவனுக்கு கோபம் நண்பன்,
“செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.”

                                                 எனும்  வள்ளுவன் வாக்கின் படி கோபம் கொண்டவனுக்கு கோபம் பகைவன்.


                                        - கதை சொல்லி...

Monday, February 28, 2011

கிடைக்குமா இலவச தொல்லைக்காட்சி?

இன்னைக்கு விட்டு போன ரேசன் கார்டுகளுக்கு இலவச தொல்லைக்காட்சி வழங்கிக் கொண்டு இருக்கின்றனர், நானும் போய் வரிசையில நிற்கணும்.. இல்லாட்டி ஆத்தா வையும்....

எதையாவது எழுதி விடு..

மதிப்பு.
    
       எங்களுக்கும் மதிப்பு உண்டு
       ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை
       அடகு பிடிக்க வந்து விடுவார்கள்

                         - கதை சொல்லி...